திருக்கோயில் காட்சிகள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

அழகன் குளம் ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழகத்தின் பண்டைய துறைமுகங்களுள் ஒன்று அழகன் குளம் ஆகும். இதுஇலங்கை நாட்டிற்கு வெகு அருகில் உள்ளது. இவ்வூர் துறைமுகத்தின் வழியாகத்தமிழர்கள் ரோமன் போன்ற பல வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்புகொண்டிருந்துள்ளனர்.இங்கு வைகை ஆறு கடலுடன் கலக்கின்றது. அவ்வாறு கலக்கும் வைகைஆற்றுடன் கடலும் இணைந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடல்நீர் இவ்வூருக்குள் ஊடுறுவி வருகின்றது. இதன்முலம் வற்றாத உயிர் நதியாகஇவ்விடத்தில் வைகை ஆறு விளங்குகின்றது.

இயற்கையான துறைமுக அமைப்பைப் பெற்றிருக்கும் இந்த அழகன் குளம்தமிழகத்தின் பழைய துறைமுகங்களின் வரிசையில் குறிக்கத்தக்கதாக உள்ளது. மருங்கூர்ப்பட்டிணம் என்பது இதன் சங்ககாலப் பெயர் ஆகும். நற்றிணையில்இவ்வூர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது.
இது அகழ்வாய்வுக் களமாகவும் விளங்குகின்றது. இங்கு அகழ்வாய்வுசெய்தபோது பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய மண்பானைகளின்சிறுபகுதிகளான ஓடுகள், மணிகள், வெளிநாட்டுக் காசுகள் போன்றனகிடைத்துள்ளன.பானை ஓடுகளில் தமிழில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வகைஎழுத்துக்கள் முதல் நூற்றாண்டைச் சார்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள்கருதுகின்றனர். மேலும் வெளிநாட்டுப் பெண்களின் கைரேகைகள் முதலியனவும்தென்படுகின்றன. முன்று வெளிநாட்டுக் காசுகள் கிடைத்துள்ளன. இவை ரோமன்நாட்டைச் சார்ந்தனவாகும். இக்காசுகளின் ஒரு பக்கத்தில் வெற்றிக் கடவுளும், மறுபக்கத்தில் ரோமன் நாட்டின் அரசர் ஒருவரின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு பழங்காலம் முதலே பெருமையுடன் இராமநாதபுர மாவட்டத்தில்அமைந்துள்ள அழகன் குளம் இருந்து வந்துள்ளது. தற்போது இதன் பெயர்அழகன்குளம் என மாறி உள்ளது. இதற்குக் காரணம் அழகர் கோயில் சார்புடையமக்கள் இங்குக் குடியேறிய போது இவ்வூருக்கு அழகன் குளம் என்ற பெயர்ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப் பெறுகிறது.


தகவல்களுக்கு நன்றி: Tamilnation.org, tn.arc.in

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

சந்தான கோபால மந்த்ரம்

ஓம் தேவகி சுதா கோவிந்தா

வசுதேவ ஜெகத் பதே

தேஹிமே தனயம்

கிருஷ்ணா த்வமகாம்சரணம்

கத்தா தேவ தேவஜகன்னாத

கோத்ரா வறிதி கரப் பிரப்தோ

தேஹிமே தணயம் சீக்ரம்

ஆயுஷ்மந்தம் யஷஸ்ரீனம்

திங்கள், 13 ஏப்ரல், 2009

பஜனைமடத்தெரு

யாதவர்கள் அதிகம் வசிக்கும் பஜனைமடத்தெரு, அழகன்குளத்தின் மூத்த பூர்வீகக் குடிகள் வசிக்கும் பகுதியாகும். ஆரம்ப காலத்தில் ஊரின் வடக்குப் பக்கத்தில் வசித்த அவர்கள், பிற்காலத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக அழகன்குளத்தின் தென்பகுதிக்கு குடியேறினார்கள். அது மட்டுமல்லாது நிலங்களையும் மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்தனர்.

இன்றும் அழகன்குளத்தின் விவசாயக்க் குடிமக்கள் இருப்பது பஜனைமடத்தெருவில்தான். மார்கழி மாதம் முப்பது நாளும் கண்ணன் கோவிலிலிருந்து பஜனை பாடிச் சென்று பாவை நோன்பு நோட்பவர்கள் வசிக்கும் பகுதியாகையால் அது பஜனைமடம் என்று அழைக்கப்பட்டது.

இன்று அந்த அளவிற்கு கூடுதல் சதவீதத்தினர் கலந்து கொள்ளவில்லையென்றாலும் சிறுவர் சிறுமியர் மார்கழி மாதத்தில் பஜனை பாடி ஊரைச் சுற்றி பிற கோவில்களுக்கும் சென்றுவருகின்றனர்.

அழகன் குளம் ஓர் அறிமுகம்

அழகன்குளம் பெயருக்கு ஏற்றார் போல அழகிய குளங்கள் நிரம்பிய கிராமம். கிராமம் என்பதை விட ஒரு குட்டி நகரம் என்று கூறுமளவிற்கு மக்கள் தொகை, கல்வி வசதிகள், கடைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரமிய பேரூர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தொன்மையும், பெருமையும் மிக்க வைகை நதி கடலுடன் சங்கமிக்கும் சதுப்புநிலப்பகுதியில் ஒருபுறம் கடலும், இருபுறம் ஆறும் சூழ்ந்த தீபகற்பமாக அழகன்குளம் அமைந்துள்ளது. இராமநாதபுரம் நகரிலிருந்து பதிநான்கு கிலோமீட்டர்கள் ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்தால் அழகன்குளத்தை வந்தடைய முடியும்.


--------------------------------------------------------------------------------

அழகன்குளம் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயம்

கோயில் இருப்பிடம்
இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழிச்சாலையில் நதிப்பாலம் என்றொரு ஊர் உள்ளது. அதன் அருகே அமைந்துள்ள ஊர்தான் அழகன் குளம் ஆகும். இங்குதான் சந்தான கோபாலகிருஷ்ணசாமி வீற்றிருக்கிறார்.

கோயில் வரலாறு
இக்கோயில் திருப்பதித் தலத்தில் இருந்துக் கொண்டு வரப்பெற்ற பிடி மண்ணை அடிப்படையாக வைத்துக் கட்டப் பெற்றதாகும். ஒரு காலத்தில் முத்துக் கருப்ப முகுந்தர் என்பவர் அழகன் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு ஆண்டுதோறும் திருப்பதி சென்றுத் தரிசிப்பது வழக்கம். இவரின் முதிய வயதில் இப்பிரார்த்தனை செய்ய இயலாது போனது. எனவே இவர் திருப்பதி பெருமாளைத் தரிசிக்க இயலவில்லையே எனக் கவலைப்பட்டார். அப்போது இவரின் கவலையைப் போக்கும் வண்ணமாக திருப்பதிப் பெருமாள் கனவில் தோன்றி "நானே அழகன் குளத்திற்கு உன்னைக் காண வருகிறேன். நீ வரவேண்டாம். என் திருப்பதியில் இருந்துப் பிடிமண் எடுத்துச் சென்று அழகன் குளத்தில் வைத்து வழிபடு'' என்றார். அவ்வடிப்படையில் தோன்றியதுதான் இக்கோயில்.

கோயில் நிர்வாகம்
இக்கோயிலின் நிர்வாகத்தைப் பெரியவர் அமரர் நா. பத்மநாபன் செய்து வந்தார். இவர் தீவிர கண்ணன் பக்தர். இவர் இக்கோயிலின் திருப்பணிகளில் கவனம் செலுத்தினார். அவ்வாறு கவனத்துடன் செய்து வந்த இப்பணி நிறைவடையும் தருவாயில் இவரும் கண்ணன் பாதம் சேர்ந்தார்.
இவரைத் தொடர்ந்து இவரின் குடும்பத்தினர்
திரு. ஆ. ம ஸ்ரீதரன்திருமதி வாசுகி
திரு. நா. கோ. தெய்வப்பிரகாசம்திருமதி கிருஷ்ணை
திரு. நா. ப. அசோகன் திருமதி மணிமேகலை
திரு. நா. பிரகலாதன்
திருமதி. சுமுகி
ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணரை வழிபட்டால் புத்திரப்பேறு இல்லாதவர்க்குப் புத்திரப்பேறு கிட்டும்.
நோயற்ற வாழ்வு நிலைக்கும்.
தொழிலில் மேன்மை ஓங்கும்.
கருட தரிசனம் கண்டால் கல்வி பெருகும்.
செல்வம் பெருகும்.

இக்கோயிலில் உள்ள சன்னதிகள்
ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணசாமி சன்னதி
ஸ்ரீ ஆண்டாள் சன்னதி
ஸ்ரீ விஷ்வக்சேனர் சன்னதி
ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் சன்னதி
ஸ்ரீ நம்மாழ்வார் சன்னதி
ஸ்ரீ ராமானுஜர் சன்னதி
ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி

சம்ரோக்ஷணம்
இக்கோயிலில் இரண்டு சம்ரோக்ஷணங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன.
ஒன்று
22.5.1937
மற்றொன்று
25.06.2007
கோயில் நிர்மான வேலைகளைச் செய்த சிற்பி
திருமலை திருப்பதி ஆஸ்தான ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி ஆவார்.