திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 13 ஏப்ரல், 2009

அழகன்குளம் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயம்

கோயில் இருப்பிடம்
இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழிச்சாலையில் நதிப்பாலம் என்றொரு ஊர் உள்ளது. அதன் அருகே அமைந்துள்ள ஊர்தான் அழகன் குளம் ஆகும். இங்குதான் சந்தான கோபாலகிருஷ்ணசாமி வீற்றிருக்கிறார்.

கோயில் வரலாறு
இக்கோயில் திருப்பதித் தலத்தில் இருந்துக் கொண்டு வரப்பெற்ற பிடி மண்ணை அடிப்படையாக வைத்துக் கட்டப் பெற்றதாகும். ஒரு காலத்தில் முத்துக் கருப்ப முகுந்தர் என்பவர் அழகன் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு ஆண்டுதோறும் திருப்பதி சென்றுத் தரிசிப்பது வழக்கம். இவரின் முதிய வயதில் இப்பிரார்த்தனை செய்ய இயலாது போனது. எனவே இவர் திருப்பதி பெருமாளைத் தரிசிக்க இயலவில்லையே எனக் கவலைப்பட்டார். அப்போது இவரின் கவலையைப் போக்கும் வண்ணமாக திருப்பதிப் பெருமாள் கனவில் தோன்றி "நானே அழகன் குளத்திற்கு உன்னைக் காண வருகிறேன். நீ வரவேண்டாம். என் திருப்பதியில் இருந்துப் பிடிமண் எடுத்துச் சென்று அழகன் குளத்தில் வைத்து வழிபடு'' என்றார். அவ்வடிப்படையில் தோன்றியதுதான் இக்கோயில்.

கோயில் நிர்வாகம்
இக்கோயிலின் நிர்வாகத்தைப் பெரியவர் அமரர் நா. பத்மநாபன் செய்து வந்தார். இவர் தீவிர கண்ணன் பக்தர். இவர் இக்கோயிலின் திருப்பணிகளில் கவனம் செலுத்தினார். அவ்வாறு கவனத்துடன் செய்து வந்த இப்பணி நிறைவடையும் தருவாயில் இவரும் கண்ணன் பாதம் சேர்ந்தார்.
இவரைத் தொடர்ந்து இவரின் குடும்பத்தினர்
திரு. ஆ. ம ஸ்ரீதரன்திருமதி வாசுகி
திரு. நா. கோ. தெய்வப்பிரகாசம்திருமதி கிருஷ்ணை
திரு. நா. ப. அசோகன் திருமதி மணிமேகலை
திரு. நா. பிரகலாதன்
திருமதி. சுமுகி
ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணரை வழிபட்டால் புத்திரப்பேறு இல்லாதவர்க்குப் புத்திரப்பேறு கிட்டும்.
நோயற்ற வாழ்வு நிலைக்கும்.
தொழிலில் மேன்மை ஓங்கும்.
கருட தரிசனம் கண்டால் கல்வி பெருகும்.
செல்வம் பெருகும்.

இக்கோயிலில் உள்ள சன்னதிகள்
ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணசாமி சன்னதி
ஸ்ரீ ஆண்டாள் சன்னதி
ஸ்ரீ விஷ்வக்சேனர் சன்னதி
ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் சன்னதி
ஸ்ரீ நம்மாழ்வார் சன்னதி
ஸ்ரீ ராமானுஜர் சன்னதி
ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி

சம்ரோக்ஷணம்
இக்கோயிலில் இரண்டு சம்ரோக்ஷணங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன.
ஒன்று
22.5.1937
மற்றொன்று
25.06.2007
கோயில் நிர்மான வேலைகளைச் செய்த சிற்பி
திருமலை திருப்பதி ஆஸ்தான ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக